பட்டாசு வெடித்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 19 Mar, 2025
மார்ச் 19,
நண்பர்களுடன் பட்டாசுகள் வெடித்து விளையாடும் போது தவறுதலாகப் பட்டாசு வெடித்ததில் சிறுவர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு Kuala Nerang குடியிருப்புப் பகுதியில் பட்டாசுகள் வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக அவசர அழைப்பைப் பெற்றதாக PADANG TERAP மாவட்டக் காவல் ஆணையர் ABDUL RAZAK OSMAN தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இருவரும் நண்பர்களுடன் பட்டாசுகள் வெடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது பட்டாசுகளை வைத்திருந்த பையிலிருந்த பட்டாசுகள் வெடித்ததாகவும் அதிகப்படியான வெடிமருந்துகள் கொண்ட பட்டாசுகளா வெடித்ததில் ஒரு சிறுவனுக்கு உடல் முழுவதும் தீ காயங்களா ஏற்பட்டதாகவும் மற்றொரு சிறுவனுக்குக் கை கால்களில் தீ காயங்கள் ஏற்பட்டதாகவும் PADANG TERAP மாவட்டக் காவல் ஆணையர் ABDUL RAZAK OSMAN தெரிவித்தார். படுகாயம் அடைந்துள்ள 2 சிறுவர்களும் ALOR SETAR SULTANAH BAHIYAH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dua beradik cedera akibat letupan mercun di Kuala Nerang. Mercun dalam beg mereka meletup ketika bermain bersama rakan-rakan. Seorang mengalami melecur di seluruh badan manakala seorang lagi cedera di tangan dan kaki. Mereka dirawat di Hospital Sultanah Bahiyah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *