இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது!

top-news

மே 25,

18 வயது இளம்பெண் தன் ஆண் நண்பருடன் வாகனத்தில் அமர்ந்திருந்த போது அவர்கள் இருவரையும் மிரட்டி பணம் பறிக்க நினைத்த இருவர் 18 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 23 வயது 29 வயது உள்ளூர் இளைஞர்கள் இருவரும் தங்களைக் காவல் அதிகாரிகள் அடையாளப்படுத்தியதாகவும் வாகனத்திலிருந்த இருவரிடமிருந்த RM 3,000 பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதன் பின் வாகனத்திலேயே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட 18 வயது இளம்பெண் சம்பவத்திற்குப் பின் Batang Tiga காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து சம்மந்தப்பட்ட இருவரையும் காவல்துறையினர் நேற்றிரவு Taman Rambai Utama குடியிருப்புப் பகுதியில் இருவரையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட 23 வயது 29 உள்ளூர் இளைஞர்கள் இருவரையும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை மேற்கொள்ளும்படி மலாக்கா MAJISTRET நீதிபதி N.SIVASHANGARI உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததைக் காணொலியாகப் பதிவு செய்து சந்தேகநபர்கள் இருவரும் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆண் நண்பரையும் விசாரணைக்கு அழைக்கும்படியும் மலாக்கா MAJISTRET நீதிபதி N.SIVASHANGARI உத்தரவிட்டார்.

Dua lelaki ditahan kerana merogol seorang remaja perempuan berusia 18 tahun di dalam kereta selepas mengugut dan meminta wang daripada mangsa dan teman lelakinya. Kedua-dua suspek kini direman tujuh hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *