பயணிகள் பேருந்துகளுக்கு 467 சம்மன்கள்! இருவர் கைது!

top-news

ஏப்ரல் 4,

பொதுவிடுமுறை காலத்தில் பயணிகள் பேருந்துகளைச் சோதனையிட்டதில் போதைப்பொருள் பயன்படுத்திய இரு பேருந்து ஓடுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 467 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் 8,173 பேருந்துகளைச் சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக சாலையோரம் உள்ள கண்காணிப்புக் கேமிராவில் கட்டுப்பாட்டு வேகத்தை மீறி பயணித்த குற்றத்திற்காக 198 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 947 பேருந்து ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இரு பேருந்து ஓட்டுநர்கள் methamphetamine , syabu வகை போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Semasa pemeriksaan terhadap 8,173 bas penumpang sempena cuti umum, dua pemandu ditahan kerana positif dadah jenis methamphetamine dan syabu. Sebanyak 467 saman dikeluarkan termasuk 198 kerana memandu melebihi had laju yang dikesan melalui kamera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *