அரசியல் அதிகாரியை மிரட்டி லஞ்சம் பெற்ற 2 காவல் அதிகாரிகள் கைது!

top-news

மே 27,

அரசியல் அதிகாரிடை மிரட்டி சுமார் RM 1,000 வரையில் பணம் வசூல் செய்த இரு காவல் அதிகாரிகள் தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்த காவல் அதிகரிகள் இருவரும் நீதிமன்ற விசாரணையையும் ஜாமின் மனுவையும் தாக்கல் செய்தனர். சம்மந்தப்பட்ட்ட 46 வயது மாவட்டக் காவல் ஆணையரும் 34 வயது லென்ஸ் கோப்ரல் அதிகாரியும் கடந்த மார்ச் 14 பினாங்கில் உள்ள Jalan Anson சாலையில் இக்குற்றத்தைப் புரிந்தததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

குற்றம் சாட்டப்பட்ட 46 வயது Shahrizal Ali 34 வயது Fadzli Jamaludin எனும் இரு காவல் அதிகாரிகளும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரின் அரசியல் செயலாளரை மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட 31 வயது அரசியல் செயலாளர் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட இரு காவல் அதிகாரிகளுக்கும் தலா RM5,000 ஜாமின் வழங்குவதுடன் 24 ஜூன் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Dua pegawai polis dituduh memeras ugut pembantu politik untuk mendapatkan rasuah RM1,000 di Jalan Anson, Pulau Pinang. Mereka menafikan pertuduhan dan telah dibebaskan dengan jaminan RM5,000 setiap seorang sementara menunggu perbicaraan pada 24 Jun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *