அனைத்துலக போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு: RM12.6 மில்லியன் கஞ்சா பூக்கள் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலாம், மே 8,

சிலாங்கூர் போலீசார் மேற்கொண்ட தனித்தனி அதிரடி சோதனைகளில், அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் இரண்டு குழுக்கள் முறியடிக்கப்பட்டதுடன், RM12.6 மில்லியன் மதிப்புள்ள 156.7 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) மற்றும் சிப்பாங், கோத்தா வாரிசான் பகுதியில் கடந்த ஏப்ரல் 28 மற்றும் 30ஆம் தேதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷஸேலி கஹார் தெரிவித்தார்.

முதல் சோதனையின் போது, KLIA விமான நிலையத்தில் மலேசிய விமான நிலைய பாதுகாப்பு போலீசார் சந்தேகத்திற்கிடமான நான்கு பயணப்பெட்டிகளை ஸ்கேனர் மூலம் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து KLIA போதைப்பொருள் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் அடிப்படையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *