இரு வெவ்வேறு புயல்களால் 232 பேர் பலி - லட்சக்கணக்கானோர் பாதிப்பு

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

மனிலா, நவ. 11-

கடந்த வாரம் தொடங்கி பிலிப்பைன்ஸை தாக்கிய இரு புயல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை, ஆபத்து குறைப்பு கவுன்சில் அறிக்கையின்படி, நவம்பர் 4 அன்று நாட்டின் மத்தியப் பகுதிகளைத் தாக்கிய புயல் கால்மெகி புயல்  பெரும் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்படுத்தியது. இதில் 232 பேர் உயிரிழந்து, 112 பேர் காணாமல் போயினர். குறிப்பாக சேபு பகுதியில் பெரும்பாலான பலிகள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதி ஏற்கனவே செப்டம்பர் 30 அன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திலிருந்து மீள முயன்று கொண்டிருந்தது.

இதற்கிடையில், ஞாயிறு அன்று லுசோன் தீவைத் தாக்கிய புயல் புங்-வோங் குறைந்தது 18 உயிர்களைக் கொன்றது என்று பிலிப்பைன்ஸ் சிவில் டிபென்ஸ் அலுவலகம் திங்கள் அன்று அறிவித்தது. இந்த இரு புயல்களும் நாட்டின் பல பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே கால்மெகி புயலால் 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். புங்-வோங் புயல் காரணமாக 1.4 மில்லியன் பேர் அகதிகளாகினர்.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் அரசு, இரு புயல்களுக்கும் பின் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. இதன் மூலம் உதவிகளை விரைவுபடுத்த முடியும். சில பகுதிகளில் மின்சாரம், தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுனாமி எச்சரிக்கை இல்லாத போதிலும், கடல் அலைகள் 3 மீட்டர் உயரமடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *