நாடாளுமன்றத்தில் கவனக்குறைவு: இரண்டு துணை அமைச்சர்களுக்குத் துணை சபாநாயகர் நினைவுறுத்து

top-news

கோலாலம்பூர், ஜன. 21-

 மக்களவை  காலை அமர்வு நடைபெற்று கொண்டிருந்தபோது, இரண்டு துணை அமைச்சர்கள் ஒருவருடன் ஒருவர் உரையாடிக்கொண்டிருந்ததை கவனித்த துணை சபாநாயகர் டத்தோ டாக்டர் ரம்லி முகமட் நோர், உடனடியாகக் கண்டனம் தெரிவித்தார்.

இந்த கண்டனம், கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ, வீடமைப்பு, உள்ளாட்சி அரசாங்கத் துறை (KPKT) துணை அமைச்சர் டத்தோ ஐமான் அதிரா சாபு ஆகியோரை நோக்கி தெரிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுத்தின் நசூதின் இஸ்மாயில், கேள்வி–பதில் அமர்வில் பதிலளித்து கொண்டிருந்த வேளையில், சம்பந்தப்பட்ட இரண்டு துணை அமைச்சர்களும் உரிய கவனம் செலுத்தாமல் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கருத்து, அவையில் இருந்த உறுப்பினர்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர்கள்,  துணை அமைச்சர்கள் காட்ட வேண்டிய பொறுப்புணர்வை மீண்டும் நினைவூட்டும் சம்பவமாக அமைந்தது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *