2026 பட்ஜெட்டில் கல்வி - வீட்டு வசதி - சுகாதார சீர்திருத்தம் முக்கியமாக இருக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 30: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதார சீர்திருத்தங்கள் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13வது மலேசியா திட்டம் (13MP) மற்றும் மடானி பொருளாதார கட்டமைப்புடன் இணைந்து பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் இரண்டாம் அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

இந்த முறை பட்ஜெட்டின் முக்கிய கவனம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இது 13 வது மலேசியத் திட்டத்தின் முதல் ஆண்டு, எனவே அதன் முக்கிய கூறுகள் 2026 பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக அவர் இன்று  பொருளாதார மற்றும் பொது நிதி வாரம் 2025 ஐத் தொடங்கி வைத்து பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

 இந்த சீர்திருத்தங்கள் தேசிய வளர்ச்சியை வலுப்படுத்தவும், 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டை உயர் வருமான நிலைக்கு உயர்த்தவும் அரசாங்க செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அமீர் கூறினார்.

மலேசியா சரியான பாதையில் செல்கிறது என்றும் அமீர் நம்பிக்கை தெரிவித்தார். ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% வளர்ச்சியைப் பதிவு செய்து, கடந்த ஆண்டு 1.9% உடன் ஒப்பிடும்போது 1.3% பணவீக்கத்தோடு இருப்பதாகக் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *