சரவாக்கில் சட்டமன்றத்தின் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news

ஜூலை 8,


அடுத்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போது சரவாக்கில் சட்டமன்ற எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சரவாக் மாநிலச் சட்டமன்றச் சபாநாயகர் Tan Sri Mohamad Asfia Awang Nassar அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது 82 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் சரவாக் மாநிலத்தில் அடுத்த 13வது மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 17 புதிய சட்டமன்றங்கள் தோற்றுவிக்கபடுமென Tan Sri Mohamad Asfia Awang Nassar, தெரிவித்தார். புதிய சட்டமன்றங்களை அமல்படுத்தும் கோரிக்கையைச் சரவாக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Seri Abdul Karim Rahman Hamzah தாக்கல் செய்த நிலையில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 


கடந்த 2021 டிசம்பர் 18-இல் நடத்தப்பட்ட சரவாக் சட்டமன்றத் தேர்தலில் 82 சட்டமன்றங்கள் இருந்தது. அதில் 79 சட்டமன்றங்களை வென்று GPS கட்சி ஆட்சி அமைத்த நிலையில் அடுத்து 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 13வது சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 99 சட்டமன்றங்களில் தேர்தல் நடத்தப்படும் என சரவாக் மாநிலச் சட்டமன்றச் சபாநாயகர் Tan Sri Mohamad Asfia Awang Nassar தெரிவித்தார். சரவாக் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையால் இந்த மசோதா நடைமுறைக்கு வருவதால் மலேசிய தேர்தல் ஆணையத்திற்கு இந்த மசோதாவையும் புதிய சட்டமன்றத்திற்கான மாதிரி வரைவையும் அனுப்பி வைக்கபடும் என சரவாக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Seri Abdul Karim Rahman Hamzah தெரிவித்தார்.


Sarawak akan menambah 17 kerusi baharu menjadikan jumlah kerusi DUN kepada 99 pada pilihan raya negeri ke-13 pada 2027. Usul ini diluluskan dengan sokongan majoriti ADUN dan akan dikemukakan kepada Suruhanjaya Pilihan Raya Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *