மக்கோத்தா இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு!
- Thina S
- 05 Sep, 2024
Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஒற்றுமை கூட்டணியின் வேட்பாளரை ஜொகூர் மெந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என BARISAN NASIONAL தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களை இறுதிச் செய்து, யார் வேட்பாளர் எனும் முடிவை ஜொகூர் மெந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi எடுப்பார் என்றும் மாநிலத் தலைவர் எனும் முறையில் அவர் எடுக்கும் முடிவை ஒற்றுமை கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கும் என்றும் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவின் வெற்றியை உறுதிச் செய்ய ஒற்றுமை கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் செயல்படும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *