நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் அமைதிக் கூட்டங்களை தடுக்கக்கூடாது- பிரதமர் வலியுறுத்தல்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக. 23-

நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் அமைதியான முறையில் கூடும் எந்தவொரு பேரணியையும் தடுக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி இருக்கின்றார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரத்தை எழுப்பிய பிரதமர், பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

எந்தவொரு தரப்பினரும் ஒன்று கூடவும் தங்களின் மனுக்களை சமர்ப்பிக்க ஏதுவாகவும் நாடாளுமன்றத்தின் முன்புறத்தில் பிரத்தியேக இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், எந்தவொரு தரப்பினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான மாற்று தளமாக பாடாங் மெர்போக் இருக்கும் என்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார். ஆகவே, பயன்பாட்டிற்கு ஏதுவாக பாடாங் மெர்போக் சுற்று வட்டாரத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஸலேஹா முஸ்தாபாவிடம் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *