விபத்தில் ஆசிரியர் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 26: ஈப்போ-கோலாலம்பூர் கூட்டரசு நெடுஞ்சாலையில் Km126 இல் நேற்று ஒரு ஆசிரியர் தான் ஓட்டிச் சென்ற வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

56 வயதான சுல்ஹிசம் மன்சூர் என்ற அந்நபர் பேராக்கின் தஞ்சோங் மாலிமில் உள்ள UPSI பல்கலைக்கழகத்திலிருந்து சிலாங்கூரில் உள்ள பத்தாங்காலிக்குச் செல்லும்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக  முவாலிம் மாவட்ட  காவல்துறைத் துணைத் தலைவர் சுஹைமி முகமது தெரிவித்தார்.

 பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும், 54 வயது பெண் மற்றும் 17 வயது இளைஞன் – காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Seorang guru berusia 56 tahun meninggal dunia selepas kenderaan dipandunya hilang kawalan dan terjatuh di Lebuhraya Ipoh-Kuala Lumpur km126. Seorang wanita 54 tahun dan remaja 17 tahun turut cedera dalam kemalangan itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *