ஆன்லைன் மோசடியில் சிக்கி 1,99,00 இழந்த ஆசிரியை!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், செப் 9: பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட 55 வயதான ஆசிரியை ஒருவர், மோசடி செய்பவர்களுக்கு பணம் செலுத்துவதற்காக தனது சேமிப்புகள் அனைத்தையும் மாற்றி, தனது நகைகளை அடகு வைக்கும் வகையில் ஏமாற்றப்பட்டார். இதன் வழி RM199,000 இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் காப்பீட்டு பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒரு நபரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதற்கு முன்பு அழைப்பு 'காவல்துறை அதிகாரியிடம்' ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அந்தப் பெண், தாம்  பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, 'சுய ஜாமீன்' தொகையாக ஒரு தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறினார். இதனை அடுத்து பிப்ரவரி 14 முதல் செப்டம்பர் 7 வரை 32 வங்கிக் கணக்குகளில் மொத்தம் RM199,000 மதிப்புள்ள 41 பரிவர்த்தனைகளை அந்தப் பெண் செய்துள்ளார்.

அந்த மாது தனது சேமிப்பு, குழந்தையின் SSPN ஆகியவற்றைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு பணம் கொடுத்ததோடு, தனது பங்குகளை விற்று, தனது நகைகளை அடகு வைத்தும் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தாம் பாதிக்கப்பட்டதை உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண் நேற்று போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *