ஆசியான் உச்சிமாநாடு ஒட்டி அக்டோபர் 23 முதல் 29 வரை வீட்டிலிருந்தே கற்பித்தல் மற்றும் கற்றல்!
- Muthu Kumar
- 19 Oct, 2025
கோலாலம்பூர், அக் 18:
47வது ஆசியான் உச்சிமாநாடு நடைபெறவிருப்பதை அடுத்து, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் மொத்தம் 102 பள்ளிகள் அக்டோபர் 23 முதல் 29 வரை வீட்டிலிருந்தே கற்பித்தல் மற்றும் கற்றலை செயல்படுத்தவும், வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஏற்பாடுகளைப் பின்பற்றவும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சிமாநாட்டின் காலம் முழுவதும் சாலை மூடல்கள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுவதால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பான கூடுதல் தகவலுக்கு பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் தங்கள் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய நிகழ்வுகள் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும்.
நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட உலகத் தலைவர்களின் மிகப்பெரிய மற்றும் மிகவும் உயர்மட்டக் கூட்டமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல முக்கிய உலகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



