தலைவர்கள் வருகிறார்கள் - போகிறார்கள்... அமைச்சர்களும் அப்படித்தான்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 29: ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய எடுத்த முடிவு ஒரு கொள்கை ரீதியான நடவடிக்கையாகும் என்றும், இது மதிக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இருவரும், பயனுள்ள பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும், அனைத்து அரசாங்க முடிவுகளுக்கும் ஆதரவளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 தோல்வியடைந்தால் ராஜினாமா செய்வது  எனும்  நிலைப்பாட்டை தாங்கள் மதிக்கிறோம் என்று அவர் கூறினார்.

கட்சிகளின் உள் விவகாரங்களில் தாங்கள் தலையிடவில்லை என்றாலும், அமைச்சரவையில் உள்ள சகாக்களின் சார்பாக, அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும், அனைத்து அமைச்சரவை முடிவுகளையும் கூட்டாக ஆதரித்துள்ளதாகவும் தாம் உணர்வதாக அவர் கூறினார்.

தலைவர்கள் வருகிறார்கள், போகிறார்கள், அமைச்சர்களும் அப்படித்தான். அமைச்சரவையில் பணியாற்ற கட்சியிலிருந்து சிறந்த நபர்களை பிரதமர் தேர்ந்தெடுப்பார் என்று அவர் கூறினார்!

Timbalan Perdana Menteri Ahmad Zahid Hamidi menghormati keputusan Rafizi Ramli dan Nik Nazmi meletak jawatan sebagai tindakan berprinsip. Beliau memuji sumbangan mereka dalam kabinet dan menegaskan bahawa pemilihan menteri adalah hak Perdana Menteri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *