குவந்தானில் விபத்தில் தலைமை ஆசிரியர் பலி!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், ஜூலை 30: ஜெராண்டுட்டில் உள்ள (SK) துரியான் ஹிஜாவ் பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்று பேராவில் உள்ள SK குவாய் அருகே தனது கார் சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் பலியானார்.

தெமர்லோவைச் சேர்ந்த 59 வயதான முகமட் சப்ரி பக்கார், கம்போங் குவாயில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்கு புரோட்டான் ப்ரீவ் காரை ஓட்டிச் சென்றபோது, மாலை 6.30 மணியளவில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக பெரா காவல்துறைத் தலைவர் சுல்கிஃப்லி நசீர் தெரிவித்தார்.

கார் தீப்பிடித்து 80 சதவீதம் நாசமாவதற்கு முன்பு பொதுமக்கள் பாதிக்கப்பட்டவரை வெளியே எடுத்தனர் என்று அவர் கூறினார்.  மேலும் இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *