வாக்குகளின் சக்தியை உணர்ந்து ஆட்சியை நிலைநிறுத்துங்கள்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

சபா, நவ 23: சபா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமரின் நட்பிற்கிணங்க சபா மாநிலத்திற்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியகராஜன் வருகை புரிந்து அங்குள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது  ஆதரவைத் தெரிவித்து வருவதோடு, களப்பணிகளையும் பார்வையிட்டார்.

அந்த வகையில் லஹாட் டத்தோ நாடாளுமன்றத்திற்குட்பட்ட செகாமா சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரொமான்ஸா லாமினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  நேற்று நடைபெற்ற ஆடல் பாடல் இசை நிகழ்வில்  கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மக்களின் ஆதரவு பிரதமருக்கு அமோகமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இங்குள்ள மக்கள் பிரதமரை அதிகமாக நேசிப்பதைப் பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டார்.
நாடு மென்மேலும் சிறப்புகள் பெற்று திகழ, நல்லாட்சி தொடர மக்கள் தங்கள் வாக்குகளின் சக்தியை உணர்ந்து அன்வார் தலைமையிலான ஆட்சியை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *