இதை நாங்கள் ஏற்கெனவே எதிர்பார்த்தோம்! - பாரிசான் குறித்து DAP

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 16: வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக, கூட்டாட்சி அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான பாரிசான் நேஷனல், பெரிகாத்தான் நேஷனலுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கையை எட்டக்கூடும் என்பதை பக்காத்தான் ஹரப்பான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது என டிஏபி தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வால் பக்காத்தான் ஹரப்பான் சற்றும் கலங்கவில்லை என்றும், மாநிலத் தேர்தல்களில் அதன் போட்டியாளர்கள் கையாளும் எந்தவொரு அரசியல் உத்தியையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

நெகிரி செம்பிலானில் வெற்றியை உறுதி செய்வதற்காக, பக்காத்தான் ஹரப்பானின் மூன்று அங்கங்களான பிகேஆர், டிஏபி மற்றும் அமானா ஆகியவற்றுக்கிடையே அதிக ஒற்றுமையை வளர்ப்பதே தற்போது கூட்டணியின் முன்னுரிமை என்றும் லோக் மேலும் கூறினார்.

தேர்தலை எதிர்கொள்வதில், பக்காத்தான் ஹரப்பானின் அங்கக் கட்சிகளிடையே உள்ள பலமும் ஒற்றுமையுமே முக்கியமானது. சவால்களும் போட்டியும் எதுவாக இருந்தாலும், இறுதியில் முடிவெடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது  என்று லோக் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத் தேர்தலில் தனது Chennah தொகுதியில் போட்டியிடும் லோக், 2018 முதல் மந்திரி பெசார் அமினுதீன் ஹரூனின் நிர்வாகத்தின் செயல்திறனே பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய பலம் என்றும் கூறினார்.

நெகிரி செம்பிலான் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் அனைத்து 36 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *