ஓய்வூதியம் பெறுபவர்களைச் சுரண்டும் சுகாதார பாதுகாப்பு நிறுவனங்கள்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 27-

நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களைச் சுரண்டும் சுகாதார பாதுகாப்பு நிறுவனங்களின் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தேசிய பயனீட்டாளர் புகார்கள் மையத்தின் உயர்நிலை நிர்வாகி சாரால் ஜேம்ஸ் மணியம் கூறினார்.சுகாதார பாதுகாப்பு விற்பனை தந்திரத்தில் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் சிக்குண்டு தவிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இலவச சுகாதார பரிசோதனை என்ற போர்வையில் இந்த நிறுவனங்கள் இவர்களை கடனாளி என்ற நிலைக்கு கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆரோக்கியம் தொடர்பான புகார்கள் 2021 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையே 193 விழுக்காடு அதிகரிப்பு கண்டுள்ளதாக அவர் சுட்டி காட்டினார். பெரும்பாலும் 55 வயதிற்கு மேற்பட்ட தனி நபர்கள் இந்த சூழ்ச்சிக்கு பலிகடா ஆவதாக அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தில் ஒரு புகழ் பெற்ற நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் இலவச சுகாதார பரிசோதனைக்கு ஓய்வூதியம் பெறும் ஒரு நபர் அழைக்கப்பட்டார்.சுகாதார பரிசோதனைக்கு பிறகு தாம் கடுமையான உடல்நல பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து வெ. 20,000 மதிப்பிலான தொகுப்பை வாங்கும்படி அவருக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன் பணமாக வெ. 4,500-ஐ அவர் செலுத்தினார். இதனை நன்கு உணர்ந்த பின் இந்த சுகாதார தொகுப்பு தமக்கு தேவைப்படாது.ஆகையால் தாம் செலுத்திய முன்பணத்தை திருப்பித் தரும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு பதிலாக இழப்பீட்டு தொகையாக வெ. 15,500 மற்றும் மீண்டும் இணையும் தொகை வெ. 490 செலுத்தும்படி அந்த நிறுவனம் கூறிவிட்டது.மேலும் இந்த கொள்முதலுக்கான ஒப்பந்தம் சட்டத்திற்கு உட்பட்டது பணத்தைத் திரும்பச் செலுத்த
முடியாது என அந்த நிறுவனம் கூறிவிட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஒரு சுகாதார விளக்க கூட்டத்திற்காக சென்ற ஒரு முதியவர் இந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிநபர் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தப்படுவதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

சுகாதார பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.தங்களின் தனிப்பட்ட விவரங்கள் பகிரப்படுவதால் ஓய்வூதியம் பெறுபவர்கள் இது போன்ற பொறுப்பற்ற தொலைபேசி அழைப்புகளை பெற்று வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Kes penipuan oleh syarikat perlindungan kesihatan terhadap pesara semakin meningkat, kata pegawai NCCC, Saral James Maniam. Pesara terpedaya dengan pemeriksaan kesihatan percuma sebelum dipaksa membeli pakej mahal. Laporan meningkat 193% sejak 2021, membabitkan individu berusia 55 tahun ke atas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *