மருந்து விலையைக் காட்சிப்படுத்தும் அமலாக்கத்தின் தாக்கம் குறித்து சுகாதார அமைச்சு ஆராயும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 14-

கடந்த மே மாதம் முதலாம் தேதி தொடங்கி அமல்படுத்தப்பட்ட மருந்து விலை காட்சிப்படுத்துதலுக்கான 2025ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு உத்தரவின் கீழ் மருந்து விலையைக் காட்சிப்படுத்தும் அமலாக்கத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து சுகாதார அமைச்சு ஆய்வை மேற்கொள்ளும்.

வரும் செப்டம்பரில் தொடங்கும் ஆய்வின் கண்டுபிடிப்புகள், குறிப்பாக தனியார் சுகாதார மையங்களில் மருந்து விலைகளை நிர்ணயித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் மிகவும் விரிவான மற்றும் நிலையான கொள்கை மேம்பாடுகளுக்கான திட்டங்களை வகுப்பதற்கு ஒரு முக்கிய உள்ளீடாக இருக்கும் என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 1,639 தனியார் சுகாதார மையங்களில் 55 விழுக்காடு, இந்த முயற்சியின் கீழ் மருந்து விலையைக் காட்சிப்படுத்துதலை செயல்படுத்தியுள்ளன.
55 விழுக்காடு அல்லது 900 தனியார் வளாகங்களில் அதற்கான இணக்கம் திருப்திகரமான அளவில் இருப்பது, சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளதாகவும் லுகானிஸ்மான் கூறினார்.

"கண்காணிப்பை வலுப்படுத்துதல், தொடர் வழிகாட்டி அமர்வுகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் வளாகங்களுக்கு எதிராக படிப்படியாக அமலாக்கத்தை செயல்படுத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளின் தேவை இன்னும் இருப்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன." என்றார் அவர்.

மக்களவையில், தனியார் சுகாதார மையங்கள் மற்றும் சமூக மருந்தகங்களில் மருந்து விலையைக் காட்சிப்படுத்துதல், சுகாதார சேவை கட்டணங்களை கட்டுப்படுத்துவதில் அதன் செயல்திறன் குறித்து கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் யுனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *