ஜப்பான் ஓபன் இறுதிப்போட்டிக்கு பெர்லி டான்-எம். தினா முன்னேறினர்!
- Muthu Kumar
- 20 Jul, 2025
தோக்கியோ, ஜூலை 20-
மலேசியாவின் முதன்மை பெண்கள் இரட்டையர் பெர்லி டான்-எம். தினா. ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதியில் அபார வெற்றி பெற்று. இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
தோக்கியோவில் உள்ள மெட்ரோபோலிட்டன் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற அரையிறுதியில், ஜப்பானின் நமி மாட்சுயாமா-சிஹாரு ஷிடா ஜோடியை 21-18, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி, முந்தைய 14 சந்திப்புகளில் 13,இல் தோல்வியடைந்த பதிவை முறியடித்தனர். இந்த வெற்றி, மலேசிய ஜோடியின் முதல் இறுதிப்போட்டி வாய்ப்பாக அமைந்தது.
48 நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டமான ஆட்டத்தில், பொலி தினா ஆக்ரோஷமான ஆட்டத்தையும், சிறந்த ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தினர். முதல் செட்டில் 18-18 என சமநிலையில் இருந்தபோது, தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றனர். இரண்டாவது செட்டில், ஜப்பானிய ஜோடியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வெற்றியை உறுதி செய்தனர். உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஜப்பானிய ஜோடிக்கு எதிராக மலேசியாவுக்கு இது முதல் வெற்றியாகும்.
இறுதிப்போட்டியில், பெர்லி-தினா, தென் கொரியாவின் பேக் ஹா நா-லீ யு லிம் ஜோடியை எதிர்கொள்ளவுள்ளனர். இந்த வெற்றி, மலேசிய பேட்மிண்டன் அணிக்குப் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை, மலேசிய இளம் வீராங்கனைகளின் திறமையையும், உறுதியையும் உலகுக்கு வெளிப்படுத்தி, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



