பேர்லி-தினா ஜோடி அரையிறுதியில் தோல்வி!
- Muthu Kumar
- 27 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 27-
சீனாவின் ஜியா யி பான்-ஜாங் ஷு ஷியான் ஜோடி, மலேசியாவின் மகளிர் இரட்டையர் பேர்லி டான்-எம். தினா ஜோடி நேற்று நடைபெற்ற சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இவர்கள் தோல்வியடைந்தனர்.
இந்தத் தோல்வி, உலகின் மூன்றாம் நிலை ஜோடியான பேர்லி-தினாவின் தொடர்ச்சியான இரண்டு இறுதிப் போட்டி வாய்ப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தது. கடந்த வாரம் ஜப்பான் ஓபனிலும், கடந்த மாதம் இந்தோனேசிய ஓபனிலும் இவர்கள் இரண்டாம் இடமே பிடித்திருந்தனர்.
சாங்ஜோவில் உள்ள ஒலிம்பிக் மைய ஜிம்னாசியத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், பேர்லி-தினா ஜோடி, சீனாவின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், நேரடி செட்களில் 21-14, 21-17 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வி. உலகின் ஏழாம் நிலை ஜோடியான யி பான்-ஷு ஷியான் ஜோடிக்கு பேர்லி-தினா மீது 4-1 என்ற மேலாதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆட்டத்தில், மலேசிய ஜோடி, சீன ஜோடியின் ஆட்டத்திற்குப் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால், அவர்களின் இறுதிப் போட்டி கனவு தகர்ந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



