இதயத்தை உடைக்கும் துயரம்! - விபத்து குறித்து அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 9: இன்று அதிகாலையில் UPSi பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கோர விபத்தில் சிக்கி பலியானத் துயரச் சம்பவத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கஷ்டத்தை எதிர்கொள்ள வலிமையும், மீள்தன்மையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்க உயர்கல்வி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
இது போன்ற இதயத்தை உடைக்கும் துயரங்கள், எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும், ஒருபோதும் அவசரப்படாமல் இருக்கவும் நமக்கு ஒரு நினைவூட்டலாக இருக்க வேண்டும். வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது என்று அவர் கூறினார்!

PM Anwar Ibrahim merakamkan takziah atas tragedi kemalangan melibatkan pelajar UPSI. Beliau mengarahkan bantuan segera kepada keluarga mangsa dan mengingatkan rakyat supaya berhati-hati, tidak gopoh kerana nyawa amat bernilai dan tidak ternilai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *