தைப்பிங்கில் கடும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு-202 பேர் தற்காலிக மையங்களில் தஞ்சம்!

top-news
FREE WEBSITE AD

(தி.ஆர்.மேத்தியூஸ்)

தைப்பிங், அக். 5-

நேற்று முன்தினம் தொடங்கி பெய்து வரும் கடும் மழையால் தைப்பிங் வட்டாரத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு பாதிக்கப்பட்டுள்ள லாருட் மாத்தாங் மற்றும் செலாமா ஆகிய மாவட்டங்களில் 65 குடும்பங்களை சேர்ந்த 202 பேர் 4 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 6.00 மணி தொடங்கி சிம்பாங் தேசியப்பள்ளி,மாத்தாங் தேசியப்பள்ளி,மாத்தாங் குளுகோர் மற்றும் தாமான் காயா பல்நோக்கு மண்டபங்களிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.

சிம்பாங் தேசியப் பள்ளியில் மிக அதிகமாக 34 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும்,மாத்தாங் குளுகோர் தேசியப் பள்ளியில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும்,தாமான் காயா பல்நோக்கு மண்டபத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரும் மற்றும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் மாத்தாங் தேசியப் பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்த வெள்ளத்தில் தாமான் பெங்காலான் மக்முர்.தாமான் பெங்காலான் செத்தியா,கம்போங் செந்தோசா,தாமான் மாவார்,தாமான் சிம்பாங் மக்முர்,கம்போங் மாத்தாங் ஜம்பு மற்றும் தெலுக் கெர்தாங் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

பாதிக்கப்பட்டவர்களை இடம் மாற்றும் நடவடிக்கையில் மலேசிய பொது தற்காப்புப் படை தீயணைப்பு மற்றும் மீட்புப் படைமலேசிய ஆயுதப்படை,அரச மலேசிய காவல்துறை,மாவட்டம் மற்றும் நில அலுவலகம் மேலும் இவர்களுக்கு உதவியாக சமூக நல இலாகா,பொதுப்பணி இலாகா,வடிகால் நீர் பாசன இலாகா,மாநில சுகாதார இலாகா,மாவட்ட கல்வி இலாகா,ரேலா உட்பட ஊராட்சி மன்றத்தினரும் இணைந்து உதவினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *