29 வரை கனமழை எச்சரிக்கை! - மெட் மலேசியா கணிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 27: மலேசிய வானிலை ஆய்வு துறை, பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் தொடர்ச்சியான கடும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை டிசம்பர் 29, திங்கட்கிழமை வரை அமலில் இருக்கும் என MetMalaysia தெரிவித்துள்ளது.

பகாங் மாநிலத்தில், குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம். ஜொகூர் மாநிலத்தில், மெர்சிங் பகுதியில் கடும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளை தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *