சர்ச்சைக்குரிய நகர்ப்புற புதுப்பித்தல் மசோதா மீதான விவாதம் தள்ளி வைப்பு!
- Shan Siva
- 28 Aug, 2025
பெட்டாலிங் ஜெயா, ஆக 28: சர்ச்சைக்குரிய நகர்ப்புற புதுப்பித்தல்
மசோதா 2025 மீதான
விவாதங்கள், அக்டோபரில்
கூடும் அடுத்த மக்களவை கூட்டத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள்
மற்றும் பாரிசான் நேஷனல் மற்றும் ஏழு பிகேஆர் எம்.பி.க்கள் உட்பட அரசாங்கக்
குழுவில் உள்ள சிலரிடமிருந்து மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத்
தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
இன்று முன்னதாக, கூட்டணியின் 30 எம்.பி.க்கள் மசோதாவை தாமதப்படுத்தி, பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக பாரிசான் துணைத் தலைவர் முகமது ஹசன் தெரிவித்தார்.
நேற்று, மசோதாவின் இரண்டாவது வாசிப்பு இன்று நடைபெறும்
என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



