எல்லா விவகாரங்களிலும் நாங்கள் கத்த முடியாது-எதிர்க்கட்சிகளுக்கு ராயர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 12-

இந்தியர்கள் விவகாரத்தில் மடானி அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது வெறும் கட்டுக்கதை தான் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கூறினார்.

2026 சுக்மா விளையாட்டுப் சுக்மாவில் சிலம்பம் போட்டியில் இருந்து சிலம்பம் நீக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினர் மடானி அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் நலனில் மடானி அரசு அக்கறை செலுத்தி வருகிறது.சிலம்பப் போட்டி சுக்மாவில் இணைக்கப்பட்டதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் கட்டுகதையாகி விட்டது.ஆக பொதுமக்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் என ராயர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்கள், துணையமைச்சர்கள் வாய் திறந்து பேசவில்லை.ஊமையாகி விட்டனர் என கடுமையாக சாடினர்.ஆனால் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் கத்த முடியாது, அமைதியாக தான் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ உட்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது என்றார்.இதன் வாயிலாகத் தான் சிலம்பப் போட்டி சுக்மாவில் இணைக்கப்பட்டது.இவ்வேளையில் மடானி அரசுக்கும் சிலாங்கூர் மாநில அரசுக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *