கெடா வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000 ஆக உயர்வு!

top-news
FREE WEBSITE AD

கெடா, செப் 23: கெடாவில் வெள்ள நீர் ஒரு வாரத்திற்குப் பிறகும் வடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 2,594 குடும்பங்களைச் சேர்ந்த 8,017 பேர் 37 தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

இது நேற்று இரவு 11 மணியளவில் 2,577 குடும்பங்களைச் சேர்ந்த 7,961 பேரை விட அதிகமாகும் என்று நலத் துறையின் பேரிடர் தகவல் போர்டல் தெரிவித்துள்ளது.

கோத்தா ஸ்டார், பெண்டாங், பொக்கோக் சேனா, குபாங் பாசு மற்றும் பண்டார் பாரு  ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  5,390 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புத்ராஜெயா வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய, கெடாவிற்கு 13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில அரசிடமிருந்து RM1,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *