மலேசிய இந்துதர்ம மாமன்ற மாநாட்டில் கல்வியாளர்கள், இளைஞர்கள் 32 கல்விச் சிறப்பு விருதுகளுடன் கௌரவிப்பு
- Surendran Sumdraraj
- 02 Jul, 2026
தி. கிரிஷன்
சைபர்ஜெயா, ஜூலை 2 -
கடந்த சனிக்கிழமையன்று மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 44ஆவது தேசியப் பேராளர் மாநாடு சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் யு.ஒ.சி. மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில், மாமன்ற அருள்நிலையங்களைச் சேர்ந்த தேசிய பொதுத்தேர்வான எஸ்.பி.எம். தேர்வில் 8 'ஏ'க்கும் மேல் பெற்ற மாணவர்களுக்கும், உயர்கல்விக் கூடங்களில் இறுதித் தவணைத் தேர்வில் 3.5, அதற்கு மேற்பட்ட ஒட்டுமொத்த சராசரி தரப்புள்ளி (CGPA) பெற்ற மாணவர்களுக்கும் 32 கல்விச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, மாமன்றத்தின் தேசிய இளைஞர் பிரிவின் இந்துதர்ம இளையோர் முகாம்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, நாடு முழுவதும் இந்துதர்ம வகுப்புகள், சங்கமங்களுடன் இளையோர் நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுத்து இந்து இளையோரின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் 22 இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் புதிய அலுவலகத்திற்கான அறிமுகக் காணொளி வெளியிடப்பட்டது. மேலும், பிரிக்பீல்ட்ஸில் மாமன்றத்திற்குச் சொந்தமான புதிய கட்டடம் உருவாக முக்கியப் பங்களிப்பை வழங்கிய தாராள நன்கொடையாளர்களுக்கும் இந்நிகழ்வில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டு அவர்களின் சேவைப் பாராட்டப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



