திடீரென நிதியுதவி கேட்ட சீமான் - அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்!
- Muthu Kumar
- 19 Mar, 2026
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் செலவுகளுக்காக மக்களிடம் நிதியுதவி கோரி உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தேர்தல் களத்தில் தனித்து களம் காணும் நிலையில், இந்த காணொளி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த காணொளியில் பேசிய சீமான், பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே தங்கள் கட்சி போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார். மற்ற அரசியல் கட்சிகள் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து தொகுதிகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், வாக்குக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரம் ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் அஸ்திவாரம் போடுவதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பலமும் பண பலமும் கொண்ட வேட்பாளர்களுக்கு மத்தியில், எளிய மக்களின் பிள்ளைகளாகத் தங்களது கட்சி நிற்பதாகவும், மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றப் பணம் தேவையில்லை, தூய்மையான மனம் இருந்தால் போதும் என்பதைத் தாங்கள் நிரூபித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு தொகுதியில் பல கோடிகளைச் செலவு செய்யும் வேட்பாளர்களுக்கு இணையாக, குறைந்தபட்ச செலவைக் கூட செய்ய முடியாத நிலையிலும், கொள்கை பலத்தால் தாங்கள் களத்தில் நிற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, ஊழலற்ற, லஞ்சமற்ற மற்றும் சாதி-மதப் பேதமற்ற புதிய தேசத்தைப் படைக்க மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக பிரத்யேக இணையதள முகவரியைப் (donate.naamtamilar.org) பகிர்ந்துள்ள அவர், திரள்நிதி மூலம் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மாற்றத்திற்கான ஒரு பெரும் புரட்சியாக அமையும் என்றும், இதன் மூலம் தங்கள் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக மக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



