பதின்ம வயது கர்ப்பிணிகள் அதிகரிக்கும் அபாயம்!
- Shan Siva
- 13 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 13: 2023 முதல் இந்த
ஆண்டு மார்ச் வரை மொத்தம் 6,144 பதின்ம வயது பெண்கள்
கர்ப்பமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மகளிர் குடும்பம் மற்றும் சமூக நல
மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் நோரைனி அகமது தெரிவித்தார்.
அரசு சுகாதார
வசதிகளில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்த சுகாதார அமைச்சின்
புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 2023 இல் 2,737 சம்பவங்களும்,
2024 இல் 2,752 சம்பவங்களும், 2025 முதல் காலாண்டில் 655 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
சமூகப்
பொருளாதாரக் கண்ணோட்டத்தில், வறுமை, பள்ளி இடைநிற்றல் மற்றும் வேலை வாய்ப்புகள்
இல்லாமை ஆகியவை பதின்ம வயதினர் இந்த ஆபத்திற்கு ஆளாகக்கூடிய காரணிகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளன என்று அவர்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



