உங்கள் குழந்தைகளைக் கண்காணியுங்கள்! - வான் அசிசா வான் இஸ்மாயில்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, அக் 16: சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் பெற்றோர்கள் உறுதியாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று பிரதமரின் துணைவியாரும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிஜிட்டல் உலகின் எதிர்மறை தாக்கங்களிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க நிலையான மேற்பார்வை மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை வழக்கு, கத்தியால் குத்தப்பட்ட கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து அவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

இனிமேல், தயவுசெய்து உங்கள் குழந்தைகளை, குறிப்பாக அவர்களின் ஆன்லைன் உலகத்தை, சமூக ஊடகங்கள் அல்லது ஆன்லைன் கேமிங் தளங்களை கண்காணியுங்கள் என்று மலேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சைக்விக் பிளஸ் மற்றும் சான்றிதழ் திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *