36 லட்சம் மதிப்புள்ள பீர் - மதுபானம் - சிகரெட்டுகள் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 15: கடந்த மார்ச் 13 ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், பினாங்கு சுங்கத்துறை 36 லட்சம்  ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களைப் பறிமுதல் செய்தது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநில சுங்கத்துறை இயக்குநர் ரோஹைசாத் அலி, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜாலான் பெராபிட்டில் அமைந்துள்ள அந்தக் கிடங்கில் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

அந்தக் கிடங்கில் நடத்தப்பட்ட ஆய்வில், வரிகள் மற்றும் தீர்வைகள் உட்பட மொத்தம் 3,606,065.03 ரிங்கிட் மதிப்புள்ள, 86,800 சாதாரண மற்றும் கிரெடெக் சிகரெட்டுகள், 55,605 லிட்டர் பீர் மற்றும் மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளூர் சந்தையில் விநியோகம் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டவை என நம்பப்படுகிறது. கிடங்கின் உரிமையாளரை அடையாளம் காண அதிகாரிகள் முயன்று வருகின்றனர் என்று ரோஹைசாத் கூறினார்.

சுங்கம் செலுத்தப்படாத அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருத்தல், சேமித்து வைத்தல் அல்லது மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக, 1967 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிகள் என நிரூபணமானல்  RM100,000 முதல் RM500,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *