ரஃபிஸிக்கு பதிலாக நெகிரி மந்திரி பெசார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 28: போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரும், நெகிரி மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமினுதீன் ஹருனை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் உறுப்பினராக நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை மக்களவை இன்று நிறைவேற்றியது.

நிலையமைப்பு 76 இன் படி பிரதமர் துறையின் துணை அமைச்சர்  எம். குலசேகரன் முன்வைத்த இந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்டது.

பொருளாதாரத்துறை முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லிக்குப் பதிலாக அமினுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்,  பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒஸ்மான் சைட், டத்தோஸ்ரீ தகியுதீன் ஹாசன் ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *