ரோன்95-உதவித்தொகை பெற எஸ்.கே.பி.எஸ் கீழ் பதிவு தேவை!

top-news
FREE WEBSITE AD

பாப்பார், செப் 14-

ரோன்95 பெட்ரோல் உதவித்தொகையைப் பெற. திங்கள்கிழமை காலை மணி 10 தொடங்கி, தரை பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
அந்நிறுவனங்கள், எஸ்.கே.பி.எஸ் எனப்படும் உதவித்தொகைக்கு உட்படுத்தப்பட்ட பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் பதிவு செய்ய விண்ணப்பிக்குமாறு, உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் வலியுறுத்தியுள்ளது.

தரை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான உதவித்தொகை விநியோக வழிமுறையை கே.பி.டி.என் கண்காணிக்கும் வகையில், அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள
இணைப்பு வழியாக அவ்விண்ணப்பத்தை மேற்கொள்ளலாம் என்று அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

டாக்சி, வாடகை கார், பள்ளி பேருந்து, அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை வாகனம், தொடர்பு பேருந்து, ஆங்காங்கே நிற்கும் பேருந்து மற்றும் சிறுரக பேருந்து என மொத்தம் ஒன்பது வகை தரை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி கொண்டிருப்பதாக அவர் விவரித்தார்.

"நிபந்தனைகளில், மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும். வாகனம் விண்ணப்பதாரர் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் அந்நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். முறையான சாலை வரி இருக்க வேண்டும். மேலும் மிக முக்கியம் என்னவென்றால், நான் முன்பு குறிப்பிட்டது போல் அவ்வாகனங்கள் வழங்கப்பட்ட இரு பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்." என்றார் அவர்.நேற்று, சபா, பாப்பாரில் நடைபெற்ற மடானி விற்பனை திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *