பிரதமர் வேட்பாளராக எந்தத் தலைவரையும் நாங்கள் இன்னும் முன்மொழியவில்லை! - பாஸ் கட்சி திட்டவட்டம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 1: அடுத்த பொதுத்தேர்தலுக்கான பெரிகாத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளராக எந்தத் தலைவரையும் தாங்கள் இன்னும் முன்மொழியவில்லை என்றும்,  எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடினை கூட நாங்கள் இன்னும் முன்மொழியவில்லை என்று பாஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் விஷயம் பாஸ் அல்லது பெரிக்காத்தான் நேஷனல் மட்டத்தில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்ரு பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உட்பட பாஸ் தலைவர்கள் ஹம்சாவை பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறும் பெர்சாத்து தலைவரின் குரல் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

நாங்கள் இன்னும் யாரையும் வேட்பாளராக அறிவிக்க விரும்பவில்லை என்பதை பாஸ் தலைவர் சமீபத்தில் தெளிவுபடுத்தினார். முதலில் 16 வது பொதுத்தேர்தலில் வெல்வதில்  கவனம் செலுத்தி வருகிறோம். வேட்பாளர் பின்னர் முடிவு செய்யப்படுவார் என்று அவர் கூறினார்.

பிஎன்-ல், ஒருவர் மட்டுமல்ல, பல திறமையான தலைவர்கள் உள்ளனர். எனவே இந்தப் பிரச்சினை எழவில்லை  என்று இன்று பாஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தக்கியுதீன் கூறினார்.

வைரலான வீடியோ தொடர்பில், அதன் கூற்றுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்று தக்கியுதீன் நினைவூட்டினார்.

பிஎன் பிரதமராகத் தேர்ந்தெடுப்பது குறித்த அதிகரித்த ஊகங்களுக்கு மத்தியில் இந்த வீடியோ வந்துள்ளது.  இது பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் தொடர்பான சட்டப்பூர்வ அறிவிப்புகளுடன் தொடர்புடைய ஒரு விவாதம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெர்சாத்துவுக்குள் உள் பிளவுகள் தீவிரமடைந்துள்ளதால் இது வெளிப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *