மக்கள் ஆதரவு எங்களுக்கே! புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவோம்! – முகைதீன்
- Shan Siva
- 03 Nov, 2025
கோலாலம்பூர், அக் 3: பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி இப்போது வலுவாகவும், அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவில் மீண்டும் ஆட்சிக்கு வரத் தயாராகவும் இருப்பதாக பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து
தலைவருமான முகைதீன், பெரிக்காத்தான் நேஷனல்
இப்போது அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் சேர அதிகமான
மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனல் இப்போது முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதோடு, ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் தங்களுடன்
இணைகிறார்கள் என்று முகைதீன் கூறினார். இது இக்கூட்டணியின் வளர்ச்சியைக் காட்டுகிறது
என்று அவர் தெரிவித்தார்.
மேலும் 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவும், பெரிக்காத்தான் மீண்டும் புத்ராஜெயாவிற்கு
திரும்பவும் உதவும் நம்பிக்கையை தங்களுக்கு அளிக்கிறது என்று அவர் கூறினார்.
பெர்சாத்து,
பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றுடன் பெரிக்காத்தான்
நேஷனல் கூட்டாளியான மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தீபாவளி திறந்த இல்ல விருந்துபசரிப்பில்
அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், PN பொதுச்செயலாளர்
அஸ்மின் அலி, ராட்ஸி ஜிடின்
மற்றும் அஹ்மத் பைசால் அசுமு, MIPP தலைவர் P புனிதன், கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், பாஸ் கட்சியின் காப்பார் MP ஹலிமா அலி மற்றும் Pejuang தலைவர் முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் கலந்து கொண்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



