தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம்- ராகுல்காந்தி!

top-news
FREE WEBSITE AD

தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம், விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்துள்ளார். அதில்,

*இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள்.நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், காணொளியும் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தரவே இல்லை.

அதற்காக அரசு விதியையே மாற்றி, காணொளி கொடுக்காமல் பார்த்துக்கொண்டது.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். கர்நாடகாவிலும் நாங்கள் ஆழமான ஆய்வு செய்தோம் மிகப்பெரிய மோசடி அங்கே வெளிச்சத்திற்கு வந்தது.

நான் உங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் காட்டத் தயார் - என்ன வஞ்சனை நடந்தது என்பதையும், எங்கே நடந்தது என்பதையும் முழுமையாக, ஆதாரங்களுடன் காட்ட முடியும்.
பாஜகவின் நாடகத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம்.கர்நாடகாவில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, 6 மாதமாக முழுமையாக ஆய்வு செய்தோம். அதிலேயே இவர்கள் எப்படி தேர்தலை திருடுகிறார்கள் என்ற முழு விபரங்களையும் பிடித்தோம்.

புதிய வாக்காளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்?யார் உண்மையில் வாக்கு செலுத்துகிறார்கள்?எங்கிருந்து அந்த வாக்குகள் போடப்படுகின்றன? இப்போது அவர்களுடைய முழு திருட்டுத்தனமும் எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர் அதையும் உணர்ந்துவிட்டார்கள்.அதனால்தான் இப்போது பீகாரில் அந்த முறையையே மாற்றி. ஆனால் ஒரு புதிய வடிவில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தற்போது அவர்கள் வாக்காளர்களையே நீக்கிவிட்டு, தங்களுக்கேற்ற முறையில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கப்போகிறார்கள்.பீகாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை.இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன. இதுதான் நம் ஜனநாயகத்தின் கடுமையான உண்மை என ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *