குற்றங்களிலிருந்து தப்பிக்க வயது குறைவாக இருப்பது ஒரு சாக்கு போக்கு அல்ல! - அசாலினா ஒஸ்மான்
- Shan Siva
- 13 Oct, 2025
கோலாலம்பூர், அக் 13: குற்றவாளியின் வயதைப்
பொருட்படுத்தாமல், பாலியல் குற்ற
வழக்கும் தண்டனைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று அரசாங்கம்
உறுதியளிக்கிறது.
இதுபோன்ற குற்றங்களைச்
செய்ததற்காகப் பொறுப்பிலிருந்து தப்பிக்க வயது குறைந்தவராக இருப்பது ஒரு
சாக்குப்போக்கு அல்ல என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒஸ்மான் சைட்
வலியுறுத்தினார்.
பள்ளி மாணவர்கள் அல்லது
சிறார்களை உள்ளடக்கிய அனைத்து வழக்குகளும் அரச மலேசிய காவல்துறையால்
விசாரிக்கப்படும் என்று அசாலினா கூறினார்.
பாலியல் வழக்குகளைக்
கையாள்வதற்கு கல்வி அமைச்சகத்திற்கு அதன் சொந்த நடைமுறைகள் இருந்தாலும், அவை முற்றிலும் குற்றவியல் சட்டத்தின் அதிகார வரம்பிற்குள்
வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்..
மலாக்காவில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை புரிந்ததாக
சந்தேகிக்கப்படும் மாணவர்களை SPM தேர்வு எழுத கல்வி அமைச்சு அனுமதிக்கப்பட்டது குறித்து
கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக்கின் அறிக்கை தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து
தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



