அமெரிக்க அதிபரை நிராகரிப்பது தீர்வல்ல!
- Shan Siva
- 30 Sep, 2025
கோலாலம்பூர், செப் 30: டொனால்ட் டிரம்பை ஆசியான் உச்சி மாநாட்டிற்கு அழைத்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபரின் பங்கேற்பை நிராகரிப்பது தீர்வல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உதவியாளர் துங்கு நஷ்ருல் அபைதா தற்காத்துப் பேசியுள்ளார்.
நேரில் உண்மையைப்
பேசுவதே தூதரகக் கொள்கை. இதனால் மலேசியா காசாவுடன் ஒற்றுமையைக் காட்டுகிறது, மேலும் விருந்தோம்பலில் அறிவையும் வெளிப்படுத்துகிறது என்று
பிரதமரின் மூத்த பத்திரிகை செயலாளருமான அவர் கூறினார்.
டிரம்பின்
பங்கேற்பு மலேசியாவுக்குக் கொடுக்கப்பட்ட தூதரக அதிகாரத்தின் ஒரு பகுதி என்று
வலியுறுத்தினார். இது ஒரு நாட்டின் தலைவரின்
கொள்கைகளை அங்கீகரிப்பது அல்ல, ஆனால்
ஆசியானையும் மலேசியாவின் தலைமைத்துவத்தையும் அங்கீகரிப்பதாகும் என்றார்.
உச்சிமாநாடு
பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகளை ஈர்த்தல், வர்த்தக விரிவாக்கம், பிராந்திய
ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் முன்னேற வேண்டும் என்றும் கூறினார்.
பாஸ் தலைவர் ஹாடி
அவாங், டிரம்பை அழைப்பது பலவீனமானது என்று கூறி, அவரை “பெரிய பிசாசு” என சாடினார். அவரது நிர்வாகம் ஐ.நா.
தீர்மானங்களை மறுத்து, இஸ்ரேலுக்கு தடை
செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியதாக குற்றம்சாட்டினார்.
பாஸ் பொதுச்
செயலாளர் தகியுதீன் ஹசன், கட்சி போராட்டம்
நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட்
மார்ஷல், பெரிய போராட்டங்களை விட, டிரம்பை நேரடியாக சந்தித்து காசா பிரச்சினையைச் சொல்லுவது
பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்நிலையில் நஷ்ருல் இவ்வாறு தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



