மலேசிய பொருளாதாரத்தில் டிஜிட்டல் துறை வலுவான பங்களிப்பு
- Tamil Malar (Reporter)
- 26 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 26-
மலேசியாவின் தகவல் தொழில்நுட்ப (ICT) துறை, இ-வணிகம் (e-dagang) இணைந்து, 2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK)யில் 23.4 சதவீதம் பங்களித்துள்ளதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார். இதன் மொத்த மதிப்பு 451.3 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி–பதில் அமர்வின்போது அவர் கூறுகையில், இந்த புள்ளிவிவரங்கள் 2025 முதல் 2030 வரையிலான காலப்பகுதிக்கான மலேசிய டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட அரசால் பயன்படுத்தப்படும் முக்கியக் குறியீடுகளில் ஒன்றாகும் என்றார். இது 13-ஆவது மலேசியத் திட்டம் (RMK-13), மலேசிய டிஜிட்டல் பொருளாதார செயல்திட்டம் 2026–2030 ஆகியவற்றுடன் ஒத்திசைவாக அமைகிறது என்றும் அவர் விளக்கினார்.
மேலும், 2024 ஜூன் மாதம் வரை நாட்டின் டிஜிட்டல் முதலீடுகள் மொத்தமாக 589.9 பில்லியன் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இந்தத் துறை மூலம் 245,602 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
அதே காலப்பகுதியில், டிஜிட்டல் பொருளாதாரத்திலிருந்து கிடைத்த மொத்த வருமானம் 845.6 பில்லியன் என பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



