பொருளாதார அமைச்சு நிதியமைச்சின் கீழ் இயங்கும்!

- Sangeetha K Loganathan
- 27 Jun, 2025
ஜூன் 27,
பொருளாதார அமைச்சு இன்றிலிருந்து இரண்டாவது நிதியமைச்சரான Datuk Seri Amir Hamzah Azizan கட்டுப்பாட்டில் இயங்கும் என அரசுத் தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பொருளாதார அமைச்சிற்குப் புதிய அமைச்சர் பொறுப்பேற்பது குறித்து பிரதமர் Datu Seri Anwar Ibrahim தலைமையில் கடந்த 25 ஜூன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் புதிய அமைச்சருக்குப் பதிலாக இரண்டாவது நிதியமைச்சரான Datuk Seri Amir Hamzah Azizan பொருளாதார அமைச்சை வழிநடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாகவும் அரசுத் தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar தெரிவித்தார்.
பி.கே.ஆர் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்த Datuk Seri Rafixi Ramli பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் பொருளாதார அமைச்சு பிரதமர் துறையில் கீழ் இயங்கியதாவும் தற்போது இன்று முதல் இரண்டாவது நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தலைமையில் இயங்கும் என அரசுத் தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar தெரிவித்தார்.
Kementerian Ekonomi kini diletakkan di bawah kawal selia Menteri Kewangan Kedua, Datuk Seri Amir Hamzah Azizan. Keputusan ini dibuat selepas kekosongan ditinggalkan oleh Rafizi Ramli dan dimuktamadkan dalam mesyuarat Jemaah Menteri pada 25 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *