இங்கிலாந்தின் பொருளாதார வல்லுநர்களுடன் அன்வார் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 5,

பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இங்கிலாந்தின் பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இச்சந்திப்பு சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்ந்ததாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார். இங்கிலாந்தின் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் இயக்குநரும் லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Dr Mariana Mazzucato அவரின் குழுவினருடன் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக அன்வார் தெரிவித்தார். மலேசியாவின் முன்னேற்றத்திற்கு நவீனப் பொருளாதாரக் கொள்கைகளின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். 

உலகப் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மலேசியா முக்கிய பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் புதிய தொழில்நுட்பக் கண்டுப்பிடிப்புகளுக்கான மூலதனங்கள்,  அரசு மற்றும் தனியார் துறைகளுடனான ஒத்துழைப்புகள் குறித்தும் எதிர்காலப் பொருளாதாரத்தின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டிப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். பொருளாதார மந்த நிலையிலிருந்து உலக நாடுகள் மேம்பட்டு வரும் நிலையில் மலேசியாவின் பொருளாதாரக் கொள்கைகளும் அதன் முதலீடு வர்த்தகக் கொள்கைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *