மலாக்கா விபத்து - ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 10: மலாக்காவில் நேற்று பிற்பகல் நடந்த கடுமையான விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்; மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

பாடாங் ஜம்பு போக்குவரத்து சிக்னல் சந்திப்பில், மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல் துறை தலைவர் கிறிஸ்டோபர் பட்டிட் தெரிவித்தார்.

மலாக்கா நகர மையத்திலிருந்து புக்கிட் பெருவாங் நோக்கிச் சென்ற பெரோடுவா மைவி காரை ஓட்டிய 35 வயது நபர், திடீரென ‘சிறு தூக்க’ ஏற்பட்டதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் எதிர்திசை பாதைக்கு சென்று, மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களுடன் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஷாஹ்ரோல் அனுவார் ரோபி எனும் 44 வயது நபர்  தலை மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பெண் கார் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *