பாசாங்கு செய்யும் கட்சிகள் - சிலாங்கூர் மந்திரி பெசார் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

ஷ ஆலம், மே 21: சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷாவுக்குத் விசுவாசத்தைக் காட்டுவதுபோல் பாசாங்கு செய்யும் அனைத்துக் கட்சிகளையும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி இன்று எச்சரித்தார்.

சில கட்சிகள், உண்மையில் தங்கள் அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில், அரச அமைப்பு, இனம் அல்லது மதத்தைப் பாதுகாப்பது போல் பாசாங்கு செய்யும் என்று அமிருதின் கூறினார்.

தங்கள் நலன்களுக்குச் சாதகமற்ற சூழல் ஏற்படும்போது, ​​இதே தரப்பினர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும், பாரபட்சமான விசுவாசத்தைக் காட்டும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கிற்கு நன்மை தரும்போது மட்டுமே இனம், மதம் மற்றும் அரச குடும்பத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள், மேலும் அது தங்கள் நலன்களுக்குப் பயன்படாதபோது தங்கள் கொள்கைகளைக் கைவிடுகிறார்கள் என்று அமிருதின் தெரிவித்தார்.

வெளித் தரப்பினர் சிலாங்கூர் அரச குடும்பத்தின் நம்பகத்தன்மையை அவமதித்தபோது, ​​இதே நபர்கள்தான் அரசியலுக்காக மௌனம் காத்தார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

 சுல்தான் ஷரஃபுதீன் மற்றும் மாமன்னரை அவமதித்ததாக 2023-ல் குற்றம் சாட்டப்பட்ட பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் சனுசி நோரைத்தான் அமிருதின் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

கெடாவின் மந்திரி பெசாரான சனுசி மீது ஆரம்பத்தில் இரண்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, ஆனால் சுல்தானிடம் மன்னிப்புக் கேட்ட பிறகு, சிலாங்கூர் ஆட்சியாளர் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *