சிலாங்கூர் மாநில தமிழ் மாணவர்கள் பங்கேற்று அசத்திய நாடகம் & நடனப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஆக 4: சிலாங்கூர் மாநில இடை நிலைப் பள்ளித் தமிழ் மாணவர்கள் மற்றும் தொடக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான 8-ஆம் ஆண்டு டான் ஸ்ரீ கே.ஆர் சோமா சுழற்கிண்ண நாடகப் போட்டியும் மற்றும்  முதலாம் ஆண்டு நாவின் பால் சுழற்கிண்ண நாட்டியப் போட்டியும்  பந்திங் கோல லங்காட், டேவான் ஸ்ரீ ஜூக்ராவில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்க் கல்வி கலை கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்நிகழ்வில்  12 தமிழ்ப் பள்ளிகளின்  நடனம் மற்றும் இடைநிலைப் பள்ளித் தமிழ் மாணவர்களின் நாடகங்கள் இடம்பெற்றன.

வண்ணமயமாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவச் செல்வங்களின் அத்தனை படைப்புகளும் அரங்கை வசமாக்கின.

அரங்கம் நிறைந்த கூட்டத்திற்கு மத்தியில், ஆச்சரியம் காட்டியது விழா.


தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் நாவின் பால் நிறுவனத்தின் ஆதரவோடு முற்றிலும் இலவசமாக  நடைபெற்ற இந்நிகழ்வை, ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும் சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளருமான ஔவை முருகன் கண்ணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்வின் உருக்கமான காட்சியாக அண்மையில் காலமான தனது மகளின் நினைவுத் தொகுப்பினை திரையில் படரவிட்டு,  ஜின் ஜினுக்கான் பாடலுக்கு வேஷமிட்டு அவ்வை முருகன் ஆடியது அனைவரையும் கலங்கச் செய்தது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *