செவிலியர்களுக்கான உடை தாமதமாக விநியோகம்! - சப்ளையருக்கு RM 6 லட்சத்துக்கும் மேல் அபராதம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 20: தரமற்ற துணியால் செய்யப்பட்ட செவிலியர் சீருடைகளை தாமதமாக வழங்கியதற்காக ஒரு சப்ளையருக்கு RM665,334.95 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிஃப்லி அஹ்மத் தெரிவித்தார்.

 இந்த ஆண்டு இதுவரை 3,281 மீட்டர் துணியை நிறுவனம் மாற்றியமைத்துள்ளதாகவும், ஆனால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் துணி மாற்று கோரிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் சூல்கிஃப்லி கூறினார்.

RM98.3 மில்லியன் ஒப்பந்தம் டிசம்பர் 31 வரை அமலில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சு ஒப்பந்தத்தை முடித்துவிட்டதா, அதற்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்று கேட்ட பக்காத்தான் ஹரப்பான் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கேள்விக்கு Dzulkifly இவ்வாறு  பதிலளித்தார்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட விவரக்குறிப்புகளுக்கு இணங்கவில்லை என்றால் துணியை மாற்றுமாறு நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது என்று சூல்கிஃப்லி கூறினார்.

ஒப்பந்தத்தின் கீழ் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஒப்பந்தம் நிறுத்தப்படலாம் என்று எழுத்துப்பூர்வ நினைவூட்டலை அமைச்சு வெளியிட்டதாகவும் அமைச்சர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *