பள்ளிக்கு அருகில் கைகலப்பு - மாணவர் உட்பட 8 பேர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 21: இரண்டு நாட்களுக்கு முன்பு கிள்ளானில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளிக்கு அருகில் நடந்த கைகலப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு பேரில், இரண்டாம் படிவ மாணவர் ஒருவரும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 1 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 14 முதல் 24 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கிள்ளான் தெற்கு பகுதி காவல் துறைத் தலைவர் லிம் ஜிட் ஹுவே கூறினார்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 6.50 மணியளவில் நடந்திருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சிலர் இன்னும் படித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கேலி கிண்டல்களால் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாகவும், அது பின்னர் வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததாகவும் நம்பப்படுகிறது என்று லிம் கூறினார்.

இதில் குண்டர் கும்பல் தொடர்பான எந்தக் கூறுகளும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். கலவரம் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான 26 வினாடிகள் கொண்ட காணொளி வைரலானது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *