சமயப் பள்ளி கட்டுமான நிதி மோசடி- சமயப் பேச்சாளர் விசாரணைக்காக தடுத்து வைப்பு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூலை 9-

அண்மையில் நிகழ்ந்த சமயப் பள்ளி மேம்பாட்டு நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சுயேச்சை சமயப் பேச்சாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 140,000 வெள்ளியை உட்படுத்திய இந்த மோசடி தொடர்பில் 39 வயதான சந்தேக நபரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் முகமது ரெட்சா அசார் ரெசாலி நேற்று பிறப்பித்தார்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாகக் கோம்பாக் மற்றும் ஷா ஆலம் மாவட்டங்களில் காவல்துறைக்கு இரண்டு புகார்கள் கிடைத்துள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஒமார் கான் முன்னதாகக் கூறியிருந்தார். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் 40 வயதுடைய இரு உள்ளூர் பெண்களும் அடங்குவர்.

Seorang penceramah bebas ditahan reman tiga hari bagi membantu siasatan kes penipuan dana penambahbaikan sekolah agama melibatkan RM140,000. Polis menerima dua laporan berkaitan kes itu, melibatkan dua wanita tempatan berusia 40 tahun di daerah Gombak dan Shah Alam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *