சுங்கை பாஞ்சாங் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி!

- Muthu Kumar
- 29 Mar, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
சுங்கை பாஞ்சாங், மார்ச் 29-
இங்கு, பாரிட் 13 சுங்கை பாஞ்சாங் கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் மற்றும் நிதி உதவி யும் வழங்கப் பட்டதாக அமானா நேசனல் தேசிய மகளிர் தலைவி புஷ்பா ராஜன் தெரிவித்தார்.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக இவ்வட்டாரத்தில் வசித்து வரும் இந்தியர்களும், மலாய் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர். இன்னும் இரண்டொரு தினங்களில் வரவிருக்கும் நோன்புப் பெருநாளை வரவேற்கக் காத்திருக்கும் மலாய் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான உதவிப் பொருட்கள் அமானா சுங்கை பெசார் சார்பில் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதே வேளையில் இந்த உதவிகளைப் பெற்ற மலாய் குடும்ப உறுப்பினர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தாம் தெரிவித்துக் கொண்டதாக புஷ்பா ராஜன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுங்கை பெசார் அமானா தலைவர் ஸைனோல் அஸ்மி அப்துல் ரஹ்மான் வெள்ளப் பெருக்கில் தங்களது உடைமைகளை இழந்த குடும்பங்களுக்கு உரிய உதவிகள் தொடரும் என்று உறுதி அளித்தார்.
Bantuan barangan dan kewangan disalurkan kepada keluarga terjejas banjir di Sungai Panjang oleh Amanah Nasional. Ketua Wanita, Pushpa Rajan, menyampaikan sumbangan terutama kepada keluarga Melayu menjelang Aidilfitri. Bantuan akan diteruskan bagi mangsa kehilangan harta benda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *